×

செய்யது ஹைதர் அலி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி சிஹாப் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், சிறுபான்மைச் சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து பாடுபட்டு வந்த அவரது மறைவு பேரிழப்பாகும். செய்யது ஹைதர் அலி சிஹாப்பை இழந்து வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Haider Ali ,Chief Minister ,MK Stalin , Haider Ali's death was mourned by Chief Minister MK Stalin
× RELATED நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு...