நூலகங்களுக்கு பருவ இதழ்கள் அனுப்பாதவர்கள் நூலக தேர்வு குழுவுக்கு இதழ்கள் அனுப்ப வேண்டும்: நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு

சென்னை: நூலகத்துக்கு பருவ இதழ்கள் அனுப்பாதவர்கள் உடனடியாக கன்னிமரா நூலகத் தேர்வுக் குழுவுக்கு, அந்த இதழ்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பொது நூலகத்துறையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பொது நூலகத்துறையின் கீழ் இயங்கி வரும்  மாவட்ட மைய நூலகங்கள் மற்றுமு் கிளை நூலகங்களில் நாளிதழ்கள், பருவ இதழ்கள், பெறுவதற்கான பொது நூலக இயக்குநரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் ஒன்று உள்ளது. இந்த பட்டியலில் 514 தமிழ் பருவ இதழ்கள் மற்றும் 168 ஆங்கில பருவ இதழ்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் உள்ள நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் பெரும்பாலானவை வாசகர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இதழ்களும் அடங்கியுள்ளன. எனவே வாசகர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் ஆகியோரின் தேவையின் அடிப்படைடியில் பட்டியலை மறு சீரமைப்பு செய்வதற்கு 10 பேர் கொண்ட துறை சார் நிபுணர்கள்  அடங்கிய தேர்வுக்குழு  அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வுக் குழுவில் இணைய இதழ் ஆசிரியர் சமஸ், கட்டுரையாளர்கள் ஜெயராணி, தினேஷ்அகிரா, மருத்துவர் கு.கணேசன், அதிஷாவினோ, சுட்டி கணேசன், யுவராஜ், பேராசிரியர்கள் விஜயபாஸ்கர், வீ.அரசு, கரு.ஆறுமுகத் தமிழன், போட்டித் தேர்வுக்கு தயாராகும்   இளைஞர் அருண்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தேர்வுக் குழுவின் கூட்டம் சென்னை கன்னிமரா நூலகத்தில் நேற்று நடந்தது. அதில் பருவ இதழ்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்தியாவில் வெளியாகும் அனைத்து இதழ்கள் மற்றும் நூல்கள் கன்னிமரா பொதுநூலகம் உள்ளிட்ட 4 வைப்பக நூலகங்களுக்கு  அனுப்பி வைக்கப்படும் இதழ்களில் இருந்து பொது நூலகங்களுக்கு தேர்வு செய்யப்படும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின்படி இதழ்களை  வைப்பக நூலகத்துக்கு அனுப்பாத இதழ்கள் உடனடியாக மூன்று இதழ் பிரதிகளை கன்னிமரா பொது நூலகத்துக்கு ‘பொது நூலகக் இதழ் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு’ என்று குறிப்பிட்டு நூலகர், கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 12ம் தேதி வரை கன்னிமரா நூலகத்தில் பெறப்படும் இதழ்கள் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பொது நூலகத்துறையின் இயக்குநர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Related Stories: