போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா நானும் உங்களை போல் மாணவியாக இருந்தேன்: கலெக்டர் நெகிழ்ச்சி பேச்சு

காஞ்சிபுரம்: நானும், உங்களைப்போல் மாணயிவாக அமர்ந்து இருந்தேன். கடும் உழைப்புக்கு பின் இப்போது, இந்த இடத்தில் அமர்ந்துள்ளேன் என கலெக்டர் ஆர்த்தி நெகிழ்ச்சியடன் பேசினார்.காஞ்சிபுரம் மாவட்டம், வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஆர்த்தி கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது.

நானும் சில ஆண்டுகளுக்கு முன், உங்களைப்போல் மாணயிவாக அமர்ந்து இருந்தேன். கடும் உழைப்புக்கு பின் இப்போது, இந்த இடத்தில் அமர்ந்துள்ளேன். மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் மாணவர்கள், அவர்களது பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகள் ஆகியவற்றை பயன்படுத்தி, தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.மாணவர்களில் சிலர் குழுவாக ஒன்றிணைந்து படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். சிலர், தனியாக படிக்க விரும்புவர். எனவே, உங்களுக்கு என்ன தனித்துவம் உள்ளதோ, அதையே பின்பற்ற வேண்டும் என்றார்.இதில் வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் அனிதா துணை இயக்குனர் அருணகிரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டார்.

Related Stories: