4 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் படம்

மும்பை: நான்கு வருடங்கள் கழித்து ஷாருக்கான் திரையில் தோன்ற இருக்கிறார். கடைசியாக ஜீரோ இந்தி படத்தில் ஷாருக்கான் நடித்தார். இந்த படம் 2018ம் ஆண்டு டிசம்பரில் ரிலீசானது. இந்நிலையில், அவர் நடித்திருக்கும் பதான் படத் தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாகிறது. இந்த இடைவெளியில் எந்த ஷாருக்கான் படமும் ரிலீசாகவில்லை. இதற்கு காரணம், ஜீரோ படத்தின் தோல்விதான். அந்த படத்தின் தோல்விக்கு பிறகு பல படங்களை ஷாருக்கான் நிராகரித்தார்.

அடுத்ததாக ஹிட் படம் தர வேண்டும் என்பதற்காக பல இயக்குனர்களிடம் அவர் கதைகள் கேட்டார். கடைசியாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் சொன்ன கதை பிடித்துவிட்டதால், பதான் படத்தில் அவர் நடித்தார். இதில் நடித்தபடியே அட்லி இயக்கத்தில் ஒரு படத்திலும், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகின்றன.

Related Stories: