×

பாக். அனுப்பியத வாயிலையே வைக்க முடியல!: மனிதாபிமான அடிப்படையில் நல்ல தரமான கோதுமை அனுப்பிய இந்தியாவுக்‍கு தாலிபன் நன்றி..!!

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவும், பாகிஸ்தானும் உணவு தானியங்களை அனுப்பிய நிலையில், சாப்பிட முடியாத தரம் குறைந்த கோதுமையை பாகிஸ்தான் வழங்கி உள்ளதாகவும், இந்தியா அனுப்பிய கோதுமையின் தரம் நன்றாக இருப்பதாகவும் தாலிபன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கோதுமையின் தரம் குறித்து தாலிபன் அதிகாரி ஒருவர் புகார் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், பாகிஸ்தான் வழங்கிய கோதுமை உண்ணக்கூடிய தரத்தில் இல்லை என்றும் அதேநேரம் நல்ல தரமான கோதுமை அனுப்பிய இந்தியாவுக்‍கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த பேச்சு பாகிஸ்தான் ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதை அடுத்து அந்த அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக கடந்த மாதம் இந்தியா முதற்கட்ட கோதுமையை அனுப்பியது. இரண்டாம் கட்டமாக 2 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிச்சென்ற கப்பல் நேற்று முன்தினம் அமிர்தசரஸின் அட்டாரியில் இருந்து ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகருக்கு புறப்பட்டது. ஆப்கானிஸ்தான் மக்களுக்காக 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை அனுப்புவதாக இந்தியா உறுதி அளித்ததின் அடிப்படையில் இந்த கப்பல்கள் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கனின் தாலிபான் அரசை பெரும்பாலும் இதுவரை எந்தவொரு நாடும் அங்கீகரிக்கவில்லை. அதேநேரம் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல நாடுகள் உதவிகளை அறிவித்தன.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்க உள்ளதாக அறிவித்தன. இந்தச் சூழலில் இந்தியா அனுப்பிய கோதுமையின் தரமாக உள்ளதாகவும், பாகிஸ்தான் கோதுமை மோசமாக உள்ளதாகவும் தாலிபான் அதிகாரி ஒருவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags : Bach ,Taliban ,India , Afghanistan, Wheat, India, Taliban
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!