×

ஆட்டோ டிரைவர் மேயராக தேர்வு திமுகவை எப்படி பாராட்டினாலும் தகும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

கும்பகோணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மாலை கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் சரவணன், திமுகவை சேர்ந்த துணை மேயர் சு.ப.தமிழழகனுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடைபெற்ற உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் ஒரு எளிமையான ஆட்டோ டிரைவரை மேயராக தேர்வு செய்தது என்பது கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று. இதற்கு அதிக உறுப்பினர்கள் கொண்ட திமுக, கும்பகோணம் மாநகராட்சியில் எங்களுக்கு ஒத்துழைத்தது என்பது அதைவிட சிறப்பான ஒன்று. சில விஷயங்கள் நம்பமுடியாத ஒன்றாக இருக்கும்.

மேயர் பதவிக்கு காங்கிரசுக்கு ஒதுக்கியதற்கு திமுகவினரை எப்படி பாராட்டினாலும் தகும். ஒன்றை கொடுப்பதற்கு எவ்வளவு சிரமம் உள்ளதோ அதை பெறுவதும் சிரமம். இந்த மிகப்பெரிய பொறுப்பு சாதாரண தோழருக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்களிடம் இதுபோன்ற செய்திகள் சென்று சேர வேண்டும். உண்மையான சமூக நீதி என்பது இங்கு தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : KK S. Salagiri , How to praise DMK for electing auto driver mayor: KS Alagiri interview
× RELATED இந்தியா வளர்ச்சி அடைந்ததற்கு...