×

பிரதமர் மோடி முன்னிலையில் பொக்ரானில் மார்ச் 7ல் நடைபெறவிருந்த இந்திய விமானப்படையின் ஒத்திகை நிகழ்ச்சி ரத்து..!!

ஜெய்சால்மர்: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பொக்ரானில் நாளை மறுதினம் நடைபெறவிருந்த இந்திய விமானப்படையின் மிகப்பெரிய விமான ஒத்திகையான வாயு சக்தி பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் பொக்ரானில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாயு சக்தி என்ற பெயரில் விமான ஒத்திகை நிகழ்ச்சியை இந்திய விமானப்படை நடத்தி வருகிறது. அதன்படி வரும் 7ம் தேதி வாயு சக்தி பயிற்சி நடைபெறவுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகவும் இந்திய விமானப்படை அறிவித்திருந்தது.

மொத்தம் 148 விமானங்கள் பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாகவும், ரஃபேல் விமானங்கள், முதல் முறையாக இதில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஒத்திகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் தலைநகர் காந்தி நகரில் வரும் 10ம் தேதி தொடங்கவிருந்த பாதுகாப்புத்துறை கண்காட்சியும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சிகள் ஏன் ரத்து செய்யப்பட்டன? என்பது குறித்து விளக்‍கம் அளிக்‍கப்படவில்லை.

Tags : Indian Air Force ,Pokhran ,Modi , Prime Minister Modi, Pokhran, Indian Air Force rehearsal
× RELATED விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு