திருவொற்றியூரில் 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: மின் வாரிய அதிகாரி சிக்கினார்

திருவொற்றியூர்: 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மின்சார வாரிய அதிகாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் சிறுமியை ராயபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததும் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரித்தார். இதில் மாணவி வீட்டின் அருகே வசித்துவரும் திருவொற்றியூர், வடக்கு மாடவீதியை சேர்ந்த மின்வாரிய தலைமை அலுவலக உதவி தணிக்கை அதிகாரி ராஜசேகரன் (48) என்பவர்தான்  மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் இதன்காரணமாக 6 மாத கர்ப்பமானது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து, ராஜசேகரனை நேற்று மாலை போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராஜசேகரனுக்கு மனைவி மற்றும் கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் 10வது படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories: