×

திருவாரூர் தியாகராஜர் சுவாமிகோயில் ஆழித்தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

*கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவினையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையிலும், எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறியதாவது: தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டமானது வரும் 15ந் தேதி நடைபெறுவதை ஒட்டி துறை வாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறையினர் தேரோட்டம் நடைபெறும்போது தேருக்கு முன்னும் பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். தேரோட்டம் சிறப்பாகவும், விரைவாகவும் நடைபெறும் வண்ணம் பொதுமக்களையும், தேர் இழுக்கும் பணியாளர்களையும் அரவணைத்து செல்லவேண்டும்.

நகராட்சியின் மூலம் குடிநீர் வசதி மற்றும் கழிவறைகள் செய்து கொடுக்க வேண்டும். தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். தீயணைப்புத்துறையினர் தேர்வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்புவண்டி ஒன்றினை தேருக்கு பின்னால் எடுத்து வர வேண்டும். பொதுப்பணித்துறையினர் தேர் கட்டுமான பணிகளை அவ்வப்போது பார்வையிட்டு தேவையான அறிவுரையை வழங்க வேண்டும். மின்சாரத்துறையினர் தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும்.

எனவே கோயில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிடவேண்டும். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கூட்டத்தில் எஸ்.பி விஜயகுமார், டி.ஆர்.ஒ சிதம்பரம், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவிஆணையர் ஹரிஹரன், ஆர்.டிஒ பாலசந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) மோகனசுந்தரம், தியாகராஜ சுவாமி கோயிலின் செயல் அலுவலர் கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags : Tiruvarur ,Diagarajar Swamikoi , Tiruvarur, Alitherottam,Thiyagaraja Temple
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...