×

உக்ரைனில் இருந்து மீட்கும் முயற்சியில் தென்னிந்திய மாணவர்கள் புறக்கணிப்பு: மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

சென்னை: போரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் வடமாநிலத்தினருக்கே இந்திய தூதரக அதிகாரிகள் முக்கியத்துவம் தருவதாக, சென்னை திரும்பிய மாணவர்கள் குற்றம் சாட்டினர். உக்ரைனில் போர் நடப்பதால் கடந்த சில தினங்களாக ஒன்றிய அரசு சிறப்பு விமானங்கள் இயக்கி இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வருகிறது. தமிழகத்திற்கு இதுவரை 143 மாணவர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் 5வது நாளாக நேற்றுமுன்தினம் இரவு 7 விமானங்களில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல பகுதிகளை சேர்ந்த 132 மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

அவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதுகுறித்து ஜெசிந்தா லாசரஸ் கூறுகையில், ‘இதுவரை தமிழகத்தை சேர்ந்த 393 பேர் வந்துள்ளனர்.  சுமி பகுதியில்தான் 68 தமிழக மாணவர்கள் உள்ளனர்’ என்றார். புதுக்கோட்டையை சேர்ந்த மாணவன் சீத்தாராமன் கூறுகையில், ‘உக்ரைனியர்கள் ரயிலில் ஏற விடுவதில்லை. இதை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு மீட்க வேண்டும்’ என்றார். மாணவன் விக்ரம் கூறுகையில், ‘‘உக்ரைனில் இருந்து அமெரிக்க போன்ற நாடுகள் அந்நாட்டினரை ஏற்கனவே வெளியேற சொன்னது. ஆனால் இந்திய தூதரக அதிகாரிகள் கூறவில்லை’’ என்றார்.

மாணவன் சதீஷ் கூறுகையில், ‘‘கார்கிவ் பகுதியில் இருந்து போலந்து, ருமேனியா, ஹங்கேரி போன்ற நாடுகள் வழியாக மாணவர்களை அழைத்து வர வேண்டும். இல்லை என்றால் ரஷ்யாவிடம் பேசி அதன் வழியாவது அழைத்து வர வேண்டும். சுமி என்ற பகுதியில் உணவில்லாமல் இந்திய மாணவர்கள் தவிக்கின்றனர். தூதரக அதிகாரிகள் கூறிய்படி வந்தால் போலந்து எல்லையில் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் பிரச்னை எழுப்புகின்றனர். தென்னிந்திய மாணவர்களை புறக்கணிக்கின்றனர். கேரள மாணவர்கள் 15 பேருக்கு போட்டிருந்த விமான டிக்கெட்டை மாற்றி, வட இந்திய மாணவர்களை அனுப்புகின்றனர். அதனால் நாங்கள் 2 நாளாக காத்திருந்து வந்திருக்கிறோம்’’ என்றார்.

Tags : Ukraine ,Pakir , Ukraine, South Indian students, boycott, students accuse Pakir
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...