×

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சாந்தி ேதர்வு: பெண் துணை தலைவராக சுயேச்சை தேர்வானார்

சென்னை:  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக சார்பில் 6 பேரும், காங்கிரஸ், பாமக தலா 1,  அதிமுக 3, சுயேச்சையாக 4 பேரும் வெற்றி பெற்றனர். கடந்த 2ம் தேதி புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகர தலைவர் அருள்ராஜ் மனைவி செல்வமேரிக்கு வாய்ப்பு கிடைத்தது.

காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வமேரி அருள்ராஜ், திமுக சார்பில் திமுக நகர செயலாளர் சதீஷ்குமார் மனைவி சாந்தி ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு செய்தனர். இதில் திமுக நகர செயலாளர் சதீஷ்குமார் மனைவி சாந்தி 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரி அருள்ராஜ் தோல்வியடைந்தார். பின்னர் மதியம் 3 மணிக்கு பேரூராட்சி துணை தலைவராக 10வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திராணி சுப்பிரமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Shanthi ,DMK ,Sriperumbudur ,Independent , Sriperumbudur Municipality, DMK, Shanthi, Independent candidate
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு