×

சோலையார் அணை அருகே பெண் யானை உடல் மீட்பு

வால்பாறை: வால்பாறை அடுத்த மலைநாடு எஸ்டேட் சோலையார் அணை கரையோரம் உள்ள வனப்பகுதியில்  யானை ஒன்று  அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக நேற்று மானாம்பள்ளி வனத்துறைக்கு தகவல் கிடைத்ததது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் இறந்த யானையின் உடலை சோதனை செய்ததில், இறந்து கிடந்தது 48 வயது மதிக்கதக்க பெண் யானை என்பது தெரியவந்தது.

பின்னர் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் உதவி வனப்பாதுகாவலர் செல்வம் முன்னிலையில் வனத்துறை டாக்டர் சுகுமார் உடற்கூராய்வு செய்தார். யானை இறந்து ஒரு வாரம் இருக்குமென்றும் வேறு ஒரு யானை குத்திய காயங்கள் காணப்படுவதால் ரத்தப்போக்கு ஏற்பட்டு யானை உயிரிழந்து உள்ளது என தெரிவித்தார். பிற வன விலங்குகளுக்கு உணவாக யானையின் உடல் அப்படியே விடப்பட்டுள்ளது.

Tags : Solaiyar Dam , Female elephant body recovered near Solaiyar Dam
× RELATED சோலையார் அணை அருகே பெண் யானை உடல் மீட்பு