×

கூவத்தூர் பாணியில் பாமக, சுயேச்சை உறுப்பினர்களை கடத்தி வைத்து திருமழிசை பேரூராட்சியை கைப்பற்ற அதிமுக வியூகம்

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டத்தில்  திருமழிசை பேரூராட்சியில் மொத்த 15 வார்டுகள் உள்ளன. இதில் தற்போது நடந்து. முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக 6 வார்டுகளும், மறுமலர்ச்சி திமுக 1 வார்டும் என திமுக கூட்டணி கூட்டணி 7 வார்டுகளும், அதிமுக  6 வார்டுகளும் கைப்பற்றியுள்ளன. மேலும் பாமக 1 வார்டிலும் அதிமுக அதிருப்தி வேட்பாளர் சுயேச்சையாக போட்டியிட்டு 1  வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற திமுக வுக்கு ஒரு வார்டு உறுப்பினர் ஆதரவும், அதிமுகவிற்கு இரண்டு வார்டு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் அதிமுக அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற லதா கணவர் ஜோதியும் பாமக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜேஷ் ஆகிய இருவரையும் திருமழிசை பேரூராட்சி அதிமுக நகரச் செயலாளர் டி.எம்.ரமேஷ் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Tags : AIADMK ,Thirumalisai ,Pamaka , Guwahati, Bamaga, Independent Member, Thirumalisai Municipality, AIADMK Strategy
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...