திருத்தணி நகராட்சியில் தலைவராக சரஸ்வதி பூபதி தேர்வு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 18 வார்டுகளை திமுக கைப்பற்றி வெற்றி பெற்றது. அதிமுக 2 வார்டுகளை மட்டும் பிடித்துள்ளது. இதில் சுயேச்சை 1 வார்டை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இதில் வெற்றிப்பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம்  பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல்கள் இன்று நடைபெறுகிறது. இதில், பெரும்பான்மை பலத்துடன் திமுக உள்ளதால் திமுகவை சேர்ந்தவரே போட்டியின்றி தலைவராக தேர்வாகிறார். இதில் 18வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சரஸ்வதி பூபதி, நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதேப்போன்று தலைமை கழகம் அறிவிக்கும் துணை தலைவர் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Related Stories: