அஜித் பேமிலி போட்டோ வைரல்

சென்னை: அஜித் குமாருடைய பேமிலி போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகியுள்ளது. வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் நடிக்கிறார் அஜித். இப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில், தனது மகன் ஆத்விக்கின் 7வது பிறந்தநாளை நேற்று முன்தினம் அஜித் கொண்டாடினார்.

குடும்பத்துடன் வெளியே சென்ற அவர், பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்கள் வெளியானது. அதில் அஜித், ஷாலினி, மகள் அனொஷ்கா, மகன் ஆத்விக் உள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், கண்ணுபடப் போகுது தல என்றும், அழகான பேமிலி என்றும் பல்வேறு கமென்டுகள் மூலம் அஜித்தை வாழ்த்தி வருகின்றனர். தற்போது அந்த போட்டோக்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories: