×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பட்டியல் வெளியீடு: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பட்டியலை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி துணை மேயராக டி.நாகராஜன், நகராட்சி தலைவர் பதவிக்கு திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பி.சுப்பிரமணியன், கன்னியாகுமரி, கொல்லன்கோடு ஆர்.லலிதா, நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு திருவாரூர், திருத்துறைப்பூண்டி எஸ்.ராமலோக ஈஸ்வரி, கடலூர், சிதம்பரம் ம.முத்து (எ) முத்துகுமரன், திண்டுக்கல், பழனி கே.கந்தசாமி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு கோவை, பெரியநாயக்கன்பாளையம் என்.சிவராஜன், திருநெல்வேலி, வீரவநல்லூர் பெ.கீதா, ஈரோடு, அந்தியூர் எஸ்.கீதா, பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு திண்டுக்கல், வடமதுரை எம்.மலைச்சாமி, திருச்சி, தொட்டியம் ரா.கலைச்செல்வி, தேனி, பண்ணைப்புரம் எஸ்.சுருளிவேல், புதுக்கோட்டை, கீரனூர் எம்.மகாலட்சுமி, திருப்பூர், தளி ஜி.செல்வன், நீலகிரி, தேவர்சாலை எ.வி.ஜோஸ் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Deputy Mayor ,Marxist Communist ,K. Balakrishnan , List of Deputy Mayors, Municipalities and Mayors on behalf of the Marxist Communist Party: K. Balakrishnan Announcement
× RELATED நாடாளுமன்றத் தேர்தலுக்கான...