×

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு: கடலூர் மாநகராட்சி துணை மேயராக தாமரைச் செல்வன்

சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாநகராட்சி துணை மேயராக பா.தாமரைச் செல்வன், நகராட்சி தலைவர் பதவிகளில் ஜெயங்கொண்டம்-சுமதி சிவக்குமார், நெல்லிக்குப்பம்-கிரிஜா திருமாறன், துணை தலைவர் பதவிகளில் திண்டிவனம்-ராஜலட்சுணி வெற்றிவேல், பெரியகுளம்-பிரேம்குமார், ராணிப்பேட்டை-ரமேஷ்கர்ணா, பேரூராட்சித் தலைவர் பதவிகளில் பென்னாடம்-அமுதலட்சுமி ஆற்றலரசு, காடையம்பட்டி-குமார், பொ.மல்லாபுரம்-சின்னவேடி, துணை தலைவர் பதவிகளில் கடத்தூர்-வினோத், திருப்போரூர்-பாரதி சமரன், புவனகிரி-லலிதா, கொளத்தூர்-கோவிந்தம்மாள் அம்மாசி, வேப்பத்தூர்-பொன்.கி.காமராஜ், அனுமத்தன்படி-ஆரோக்கியசாமி, ஓவேலி-சகாதேவன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

Tags : Liberation Leopards ,Tamara Selvan ,Deputy Mayor ,Cuddalore Corporation , Liberation Leopards Candidates Announcement: Tamara Selvan as Deputy Mayor of Cuddalore Corporation
× RELATED வயிற்றுப்போக்கால் பாதித்தவர்களுக்கு...