குலசேகரத்தில் பரபரப்பு காவல் நிலைய வாசலில் மாஜி பெண் கவுன்சிலர் தர்ணா: மகள் ரகசிய திருமணம் செய்ததால் ஆத்திரம்

குலசேகரம்: குலசேகரத்ைத  அடுத்து உள்ள கொல்லாரை, கைதக்கல்காலனி பகுதியை சேர்ந்தவர் தனிஷா லெட்சுமி (21). திங்கள்நகர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி 3ம் ஆண்டு  படித்து வருகிறார். அவரது தாயார் உஷா. திற்பரப்பு பேரூராட்சி அதிமுக முன்னாள்  கவுன்சிலர் ஆவார். தற்போதும் அதே கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதற்கிடையே தனிஷா கல்லூரிக்கு செல்லும் போது முட்டைக்காடு சரல்விளை  பகுதியை சேர்ந்த ஜெனிஷ் (26) உடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த  பழக்கம் நாளடைவில் காதலமாக மாறியது. 2 பேரும் அடிக்கடி வெளி இடங்களில்  சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்  27ம் தேதி தக்கலையில் உள்ள கோயில் ஒன்றில் தனிஷாவும்- ஜெனீசும் முறைப்படி திருமணம்  செய்தனர். பின்னர் இதுபற்றி வெளியே தெரிவிக்காமல் அவரவர் வீடுகளிலேயே இருந்துள்ளனர். இதனிடையே தனிஷாவின் காதல் விவகாரம் அவரது வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர்.

கடந்த 18ம் தேதி தனிஷா கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு தேர்தல் முடிந்து முடிவு தெரிந்தபின் கல்லூரியில் ெகாண்டு போய் விடுவதாக உஷா கூறியுள்ளார். இதையடுத்து  காதலனை விட்டு தன்னை பிரித்து விடுவார்களோ என்ற ஏக்கத்தில் உஷா இருந்துள்ளார். இருந்தும் செல்போன் வாயிலாக காதலனிடம் தொடர்பில் இருந்துள்ளார். இந்தநிலையில் ஜெனிஷ் கடந்த 20ம் தேதி தனிஷா வீட்டிற்கு பைக்கில் வந்து நின்றார்.

அப்போது வீட்டில் தயாராக  இருந்த தனிஷா, ஜெனிசின் பைக்கில் ஏறி கொள்ள பைக் மின்னல் வேகத்தில் பறந்தது.  இதனிடையே வீட்டில் மகளை காணாததால் பதறிபோன உஷா இதுகுறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிஷாவை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தனிஷாவும், ஜெனீசும் திருமணம் செய்து கொண்ட சான்றிதழுடன் குலசேகரம்  காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இந்த தகவல் உஷாவுக்கு தெரிவிக்கப்பட்டது. பதறிபோன அவர் காவல் நிலையத்திற்கு ஓடி வந்தார்.

பின்னர் போலீசார் மகளிடம் தனியாக பேச வேண்டும் என்று கேட்டு கொண்டார். போலீசார் 10 நிமிடம் மகளிடம் பேச அனுமதி கொடுத்தனர். அப்போது உஷா மகளிடம், நீ என்னோடு வந்துவிடு, உன்னை நல்ல நிலைக்கு ஆளாக்குகிறேன் என்ற கூறியபடி மகளை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அழுதுள்ளார். அதற்கு தனிஷா, நான் ஜெனீசை திருமணம் ெசய்து விட்டன்.  அவருடன் தான் செல்வேன் வேண்டுமானால் ஒருமாதம் கழித்த வீட்டிற்கு வருகிறேன் என்று  தாயாரிடம் கூறியுள்ளார். அதனை ஏற்று கொள்ளாத உஷா மகளை கட்டிபிடித்து அழுததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தனிஷாவை தனியாக  அழைத்து காவல் நிலையததில் அமர வைத்தனர். பின்னர் உஷாவிடம் உங்கள் மகள் 21 வயதை  தாண்டியதால் சொந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமை உண்டு. இதனால் அவர்களை  பிரித்து அனுப்ப தங்களால் இயலாது என்று  தெரிவித்தனர்.

இதனை ஏற்று  கொள்ளாத உஷா காவல் நிலையத்தின் நுழைவு வாயிலுக்கு சென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தான் 20 வருடமாக கட்டிகாத்த மகளை தன்னிடம் ஒப்டைக்க வேண்டும்  என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இருந்தும்  மகளின் மனம் இறங்காததால் போலீசார் வேறு வழியன்று காதல் ஜோடிகளை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து  உஷா தரையில் அமர்ந்து அழுத வண்ணம் இருந்தார். இந்த அழுகை சத்தம் கேட்டு போவோர்,  வருவோர் என்று பலரும் வந்து கூடினர். இதனை கண்ட இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீசார் அங்கு கூடியவர்களை வீடியோ எடுத்தனர்.

அதோடு அங்கு  நின்றவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்யுங்கள் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு கூடி நின்றவர்கள் மின்னல் வேகத்தில் காணாமல் போயினர். வேறு வழியின்றி உஷாவும் அழுதபடி வீடு திரும்பினார். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஒருவர் காவல் நிலைய வாசல் முன்பு மகளுக்காக அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தது அங்கு பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

Related Stories: