×

பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் போட்டி: ரஷ்ய, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க தடை; ஆன்ட்ரூ பார்சன்ஸ் அறிவிப்பு!!!

பெய்ஜிங்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால  பாராலிம்பிக்‍ போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரசிய விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலக நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகள் விதித்து உள்ள நிலையில் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை என உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதே போல் ரஷ்யாவுக்கு ஃபிபா விதித்துள்ள தடையால் 2018 உலக கோப்பையை  நடத்திய ரஷ்யா கால்பந்து போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ரஷ்யாவுக்கு மேலும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால பாராலிம்பிக்‍ போட்டியில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்‍கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாராலிம்பிக்‍ போட்டியின் தலைவர் ஆன்ட்ரூ பார்சன்ஸ் உக்ரைனிடம் போர் தொடுத்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசும் போரில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் பாராலிம்பிக்‍ போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாராலிம்பிக்‍ போட்டியில் ரஷ்ய வீரர்கள் 71 பேரும், பெலாரஸ் வீரர்கள் 12 பேரும் பங்கேற்க இருந்த நிலையில் இந்த திடீர் தடையால் வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.     


Tags : Beijing Winter Paralympics ,Andrew Parsons , Beijing, Paralympics, Russia-Belarus, ban, Andrew Parsons
× RELATED பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் போட்டி: கண்கவர் வாணவேடிக்கையுடன் நிறைவு