×

உக்ரைனில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக செல்சியா கால்பந்து அணியை ரூ.14,000 கோடிக்கு விற்கப்போவதாக உரிமையாளர் அதிரடி அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இங்கிலீஸ் பிரீமியம் லீக் தொடரில் பிரபலமான செல்சியா கால்பந்து அணியை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்போவதாக அதன் உரிமையாளர் அதிரடியாக அறிவித்துள்ளார். 1905ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட செல்சியா கால்பந்து அணி இங்கிலீஸ் பிரீமியம் லீக் கால்பந்தாட்டத்தில் மிகவும் பிரபலமானதாகும். இந்த அணியை 19 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரோமன் அப்ரோவிச் சொந்தமாக்கினார். செல்சியா அணி கடந்த 25 ஆண்டுகளில் 5 முறை பிரீமியம் லீக் பட்டத்தையும்,7 முறை எப்.ஏ கோப்பையையும், 4 முறை லீக் கோப்பை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

யு.இ.எப்.ஏ. சான்பியன்ஸ் லீக், ஐரோப்பிய லீக் சூப்பர் கோப்பைகளை தலா 2 முறையும், ஒருமுறை சிசா கிளப் உலக கோப்பையையும் வென்ற பெருமை செல்சியா கால்பந்து அணிக்கு உண்டு. இந்நிலையில், உக்ரைனில் நீடிக்கும் போர் சூழலால் கவலையடைந்த தொழிலதிபர் ரோமன் அப்ரோவிச், செல்சியா கால்பந்து அணியை விற்கப்போவதாக அறிவித்துள்ளார். இதில் கிடைக்கும் பணத்தை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். சுமார் 14,000 கோடி ரூபாய்க்கு செல்சியா அணியை கொடுக்க அப்ரோவிச் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chelsea ,Ukraine , Ukraine, people, Chelsea football team
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...