×

உ.பி.யில் 6ம் கட்ட வாக்குப்பதிவு ...80%-த்திற்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றிபெறும் : வாக்களித்த பின் யோகி ஆதித்யநாத் உறுதி!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில்  இதுவரை 5கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. குறிப்பாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியிலும், மாநில காங்கிரஸ் அஜய் குமார் லல்லு போட்டியிடும் தம் காஷி ராஜன் தொகுதி ஆகிய தொகுதிகளில் தேர்தல் இன்று நடக்கிறது. இன்று நடக்கும் தேர்தலில் மொத்தம் 676 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அங்கு மொத்தம் 1.5 லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 10 மாவட்டங்களில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 2.1 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.கோரக்பூர் தொகுதியில் முதல்முறையாக போட்டியடும் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து கடைசி கட்ட தேர்தல் வருகிற 7ம் தேதி 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் இதுவரை 5 கட்டமாக 292 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மார்ச் 10ம் தேதி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.   



Tags : U. ,GP ,Bajaka ,Yogi Adidyanath , Uttar Pradesh, Yogi Adityanath, BJP
× RELATED வாக்களிப்பின் ரகசியமெல்லாம் போயே...