×

தென்தாமரைகுளம் பேரூராட்சியில் பாஜவுக்கு காங்கிரஸ் பெண் கவுன்சிலர் திடீர் ஆதரவு: கண்டித்த சகோதரருக்கு சரமாரி அடி, உதை

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ 4 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும், திமுக 3 வார்டுகளிலும், அதிமுக 3 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. இங்கு பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற 8 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. பா.ஜ அதிமுகவுடன் இணைந்து தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு மேலும் ஒரு கவுன்சிலர் தேவை.

 அதேபோல் திமுக 4 சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்றதால் 7 கவுன்சிலர்கள் உள்ளனர்.  இந்நிலையில் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா  பா.ஜவுக்கு  ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பதவி ஏற்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் காரில் தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகத்துக்கு காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா வந்து உள்ளே செல்ல முயன்றார்.

அப்போது அவரது சகோதரரும், காங்கிரஸ் நிர்வாகியுமான முருகன் ஆவேசமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெயித்து விட்டு எப்படி கட்சி மாறி ஆதரவு கொடுக்கலாம் என்று கேட்டு  மல்லிகாவை தடுத்து நிறுத்த முற்பட்டார். இதைப்பார்த்த பாஜவினர் அவரை பிடித்து கீழே தள்ளினர். தொடர்ந்து அவரை பாஜ மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து திமுக, அதிமுக, பாஜவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதவி ஏற்புக்குப் பின்னர் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகாவை பாஜவினர் காரில் அழைத்துச் சென்றனர்,



Tags : Congress ,BJP ,Tenthamaraikulam , Thendamaraikulam Municipality, BJP, Congress, Female Councilor
× RELATED விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவு