×

சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி

திருவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை சேர்ந்தவர் முத்தம்மாள் (87). இவர் ஆண்டுதோறும் சிவராத்திரியன்று இரவு அருகே உள்ள  பத்ரகாளியம்மன் கோயிலில் வெறும் கையால், கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுடுவார். இந்த நிகழ்ச்சி 54வது ஆண்டாக சிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

 இதில் விறகு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சட்டியில் கொதிக்கும் நெய்யில், கையை விட்டு முத்தம்மாள் அப்பம் சுட்டார். பின்னர் பக்தர்களுக்கு அப்பத்தை பிரசாதமாக வழங்கினார்.


Tags : Sivaratri , Shivaratri, the old woman who baked bread
× RELATED மகா சிவராத்திரியை முன்னிட்டு...