ஒரத்தநாடு அருகே ஆஸ்திரேலியா ஆந்தை மீட்பு

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவரப்பட்டு கிராமத்தில் நேற்று மாலை தனியார் திருமண மண்டபம் அருகே வெள்ளை நிறத்தில் ஆந்தை ஒன்று வித்தியாசமான முறையில் கத்திக்கொண்டிருந்தது. அதனை பொதுமக்கள் பார்த்தனர். அப்போது பொதுமக்களை பார்த்த ஆந்தை வேகமாக கத்தத் தொடங்கியது . மேலும் அதன் அருகில் சென்று பார்த்தபோது அது ஆஸ்திரேலியாவை சேர்ந்த  வெள்ளை நிறம் கொண்ட அரிய வகை ஆந்தை என தெரியவந்தது.

வெளிநாட்டு ஆந்தை என்பதால் அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். ஆந்ைதக்கு நெல் உள்ளிட்ட தானியங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்குவந்த வனத்துறையினர், ஆந்தையை பாதுகாப்பாக எடுத்துச்சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories: