×

பாஸ்போர்ட்களை இழந்த மாணவர்களுக்கு அவசரகால சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறை; இந்தியர்களை மீட்கும் பணிக்கு கூடுதல் விமானங்கள்: செய்தித் தொடர்பாளர் பேட்டி

கீவ்: உக்ரைனை விட்டு வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார். வெளியுறவுத்துறையின் அறிவுரைகள் வழங்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 17,000 இந்தியர்கள் உக்ரைன் எல்லையை விட்டு வெளியேறியுள்ளதாக  மதிப்பிட்டுள்ளோம்  என பேசினார்.  

* பாஸ்போர்ட்களை இழந்த மாணவர்களுக்கு  அவசரகால சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது..!

* இது பல இந்திய மாணவர்களுக்கும் உதவும்

* ஆபரேஷன் கங்கை திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்கும் பணிக்கு கூடுதல் விமானங்கள் அனுப்பப்படும்

* ஆபரேஷன் கங்கை திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்கும் பணிக்கு கூடுதல் விமானங்கள் அனுப்பப்படும்

* மேலும் எல்லை நகரங்களில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 6 விமாங்களில் 3,352 இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளன

* உக்ரைன் எல்லையில் கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவும் இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை

* கிழக்கு உக்ரைனில் உள்ள நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்பது தான் சவாலாக இருக்கிறது

* இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி வருகிறோம்

* இந்தியர்களை மீட்பது தான் முதல் வேலை, அதே நேரத்தில் மற்ற நாட்டு மக்களுக்கும் உதவி செய்ய தயாராக உள்ளோம், ஏதேனும் குறிப்பிட்ட கோரிக்கையை சில நாடுகள் வைத்தால் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிப்போம்

* இந்தியர்கள் எல்லைக் கடப்பதற்கு வசதியாக லிவிவில் ஒரு தற்காலிக அலுவலகத்தை அமைக்க தூதரகம் (கிய்வில்) முடிவு

* கிழக்கு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக, நாங்கள் அங்கு செல்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். எங்கள் குழுக்கள் அங்கு செல்ல முடியுமா என்று நாங்கள் ஆலோசனை மேற்கொன்டு வருகிறோம், அது எளிதானது அல்ல என்பது எங்களுக்கு தெரியும்

* உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு இதுவரை 15 விமானங்கள் இந்தியா திரும்பியுள்ளதாகவும்  இதுவரை 3,352 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இவ்வாறு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்தார்.


Tags : Indians , Passports, lost, students, instruction, spokesperson
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...