×

ரஷ்யா - உக்ரைன் விவகாரம்: கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்; இந்திய மாணவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்: இந்திய தூதரகம்

கீவ்: உக்ரைனின் கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. கார்கிவ்வில் உள்ள இந்தியர்கள் பெசோஷின், பபாயி உள்ளிட்ட பகுதிகளை நோக்கி சென்று தஞ்சமடைய உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு நேரப்படி 6 மணிக்குள் (இந்திய நேரம்: 9.30 மணி)  கார்கிவ்வை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மோதல் நடைபெறும் கார்கிவ் மற்றும் பிற நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு கருதி உடனடியாக இந்தியர்களை வெளியேறும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனில் இருந்து இதுவரை 8.36 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கீவ் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுக்க சேதமடைந்த வாகனங்களை கொண்டு  பொதுமக்கள் தடைகளை ஏற்படுத்தி உள்ளன. ஸ்ப்போரிஷ்யா அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகியிருந்தது. ரஷ்ய படைகள் முன்னேறாமல் இருக்க சாலைகளில் மனித கேடயமாக திரண்டுள்ளனர்.

இந்திய மாணவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்:

தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக இந்திய மாணவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்தது. போலாந்து, ருமேனியாவில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்களுக்கு விமானப்படை விமானங்கள் மூலம் உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று இரவு பேச்சுவார்த்தை:

உக்ரைன் உடன் இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்யா கூறியுள்ளது. பெலாரசில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. பெலாரஸ் - போலந்து எல்லையில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது.

Tags : Russia ,Ukraine ,Indians ,Kharkiv ,Embassy of India , Russia - Ukraine, from Kharkiv, Indians, Exit, Indian Embassy
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...