இந்திய மாணவர்களுக்கான மால்டோவாவின் எல்லை திறப்பு: ருமேனிய சென்றுள்ள ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ட்வீட்..!!!

புக்கரெஸ்ட்: உக்ரைனில் இருந்து வரும் மாணவர்களுக்காக மால்டோவாவின் எல்லை திறக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்பதற்காக ஒன்றிய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்தீப் சிங் பூரி, கிரண் ரிஜிஜூ, விகே சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். ருமேனியா, மால்டோவா நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்பதற்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்க்கு சென்றடைந்தார்.

பின்னர் புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் விமானங்களுக்காக காத்திருக்கும் மாணவர்களுடன் அவர் உரையாடி, அவர்கள் இந்தியா புறப்படுவதை உறுதி செய்தார். மேலும் இந்தியர்களை வெளியேற்றும் செயல்முறை குறித்து விமான நிலையத்திலேயே, ருமேனியா - மால்டோவாவிற்கான இந்திய தூதர் ராகுல் ஸ்ரீவஸ்தாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தியர்களை வெளியேற்றுவதற்கான செயல்பாட்டு சிக்கல் மற்றும் விமான திட்டம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் உக்ரைனில் இருந்து வரும் மாணவர்களுக்காக மால்டோவாவின் எல்லை திறக்கப்பட்டுள்ளதாகவும், தங்கும் இடம் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

Related Stories: