4வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் பலி

அம்பத்தூர்: முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் ரோடு, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரதீப்குமார். இவரது மனைவி சுஜிதா. தம்பதியின் மகன் மோகித் (7), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன். கடந்த 27ம் தேதி, 4வது மாடியில் விளையாடிய மோகித், தவறி மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாய மடைந்தான். அவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தான்.

Related Stories: