சினிமா தொழிலாளர் சம்பள விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

சென்னை: பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில், 24 திரைப்பட சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள சினிமா தொழிலாளர்களின் புதிய சம்பள விவகாரம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையிலான தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் பொதுவிதிகளுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இருதரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுகின்றனர்.

மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலாக்கப்படும் வரை படப்பிடிப்பு மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சம்பளத்தை மட்டுமே தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர்கள், புதிய சம்பளத்தை தர வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வற்புறுத்தக்கூடாது.

Related Stories: