×

மான்டெரே ஓபன் டென்னிஸ் லெய்லா முன்னேற்றம்

மான்டெரே: மெக்சிகோவில் நடக்கும் மான்டெரே ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் லெய்லா பெர்னாண்டஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார். கனடாவை சேர்ந்த இளம் வீராங்கனை லெய்லா (19வயது, 21வது ரேங்க்) தனது முதல் சுற்றில் 6-2, 6-2 என நேர் செட்களில்   ஸ்லோவக்கியாவின் அன்னா கரோலினாவை (27வயது, 88வது ரேங்க்) எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் கொலம்பியாவின் கமிலா ஒசாரியோ 6-3, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் மெக்தலனா பிரெக்கை (போலந்து) வென்றார்.


Tags : Monterey Open tennis ,Leila , Monterey Open Tennis, Leila
× RELATED மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் லெய்லா