குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைம் வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30 மற்றும் www.tncpcr.tn.gov.in என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான படிவத்தில் புகைப்படத்துடன் வருகிற 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள், ‘‘செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 183/1, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10’’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Related Stories: