×

ஆலங்குடியில் 600 ஜல்லிக்கட்டு காளைகள் அதகளம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களும், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினரும் பரிசோதனை செய்தனர். அதன் இறுதியாக 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ அபிநயா துவக்கி வைத்தார். கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி வாசிக்க வீரர்கள் ஏற்று கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. களத்தில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு, தங்கம், வெள்ளி காசு, மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள், ஹெல்மெட் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஆலங்குடி டிஎஸ்பி வடிவேலு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Aalangudi , Alangudi, 600 Jallikkattu, bulls, Athakalam
× RELATED ஆலங்குடியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு