6வது நாளாக தீவிரமடைந்துள்ள போர்; உக்ரைன் நாட்டிற்கு 70 போர் விமானங்களை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவிப்பு

சோபியா: உக்ரைன் நாட்டிற்கு 70 போர் விமானங்களை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளது. பல்கேரியா 30 போர் விமானங்களையும், போலந்து 28, ஸ்லோவேக்கியா 12 போர் விமானங்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், 2 நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் ஹோமல் நகரில் நடைபெற்றது. உடனடியாக போரை நிறுத்திவிட்டு ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என உக்ரைன் அரசு தரப்பில் வலியறுத்தப்பட்டது.

இந்நிலையில் 6வது நாளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும், பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனுக்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு 70 போர் விமானங்களை வழங்கவுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பல்கேரியா – Mig-29 (16) , Su-25 (14), போலாந்து – Mig-29 (28) ஸ்லோவாக்கியா – Mig-29 (12) வழங்கவுள்ளது.

Related Stories: