×

பணி மாறுதலால் மன உளைச்சல்?: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியை கத்தியால் குத்திக்கொல்ல முயற்சி..!!

சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி அருகே சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. அதில் 22 கோர்ட்டுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி பொன்பாண்டி அவரது அலுவலக வேலையை பார்த்துக் கொண்டிருந்த போது அதே நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் திடீரென கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட நீதிபதி ஊழியரை தடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் நீதிபதியின் வயிற்று பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து நீதிபதி பொன்பாண்டி மருவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீதிபதி பொன்பாண்டியை கத்தியால் குத்த முயற்சித்த அலுவலக உதவியாளர் பிரகாஷை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட நீதிபதி குமரகுருவும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பணி மாறுததால் ஏற்பட்ட மன உளைச்சலால் நீதிபதியை அலுவலக உதவியாளர் கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. நீதிபதியை, ஊழியரே கத்தியால் குத்த முயற்சித்ததால் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


Tags : Salem Integrated Court , Salem Combined Court, Judge, Knife
× RELATED ₹59.43 கோடியில் 16 புதிய கோர்ட் கட்டிடங்கள்