இறுதி சடங்கில் பங்கேற்க வந்த 17 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை : மெக்சிகோவில் பரபரப்பு!!

மெக்சிகோ : துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக வந்து இருந்த 17 பேரை துப்பாக்கி ஏந்திய குழுவினர் சுட்டுக் கொன்றுள்ளது மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிச்சோகன் மாகாணத்தில் உள்ள சன் ஜோஷி டி கிரேசியா நகரின் தெருவில் மரணம் அடைந்த ஒருவரின் வீட்டில் இறுதி சடங்கு நடைபெற்றது. அப்போது ஆயுதம் ஏந்திய குழு ஒன்று அங்கு இருந்தவர்களை வெளியே இழுத்து வந்தது. பின்னர் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து கண்மூடித்தமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்த காட்சிகளை அண்டை வீடுகளில் இருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மர்ம நபர்கள் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் 17 பேர் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் உடல்கள் அனைத்தையும் கொண்டு சென்றுவிட்டதாகவும் எனவே இறந்தவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் மெக்சிகோ அதிபர் ஆன்டர்ஸ மேனுவல் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் சாலையின் நடுவே 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு இடையேயான மோதலில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாமா என்ற கோணலிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

Related Stories: