'சிறப்பு விதியின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைக்க வேண்டும்': உக்ரைன் பிரதமர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்..!!

உக்ரைன்: ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை உடனடியாக இணைக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 6வது நாளை எட்டியிருக்கிறது. பல்வேறு வல்லரசு நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் உக்ரைன் மீது ரஷ்யா உக்கிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் பிரதமர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உடனடியாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

சிறப்பு விதிகளின் கீழ் உக்ரைனை இணைப்பதில் ஐரோப்பிய யூனியனுக்கு சிரமம் ஒன்றும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரானது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று காணொலியில் அவர் கூறியுள்ளார். ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்ககூடிய நிலையில், ஜெலன்ஸ்கியின் கருத்து பரபரப்பை அதிகரித்திருக்கிறது.

விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேசியதாவது:

புதிய சிறப்பு நடைமுறையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உடனடியாக இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றேன். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் கூட்டாளர்களுக்கு நன்றியுள்ளவர்களாக உள்ளோம். ஆனால் எங்கள் குறிக்கோள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைவது. மிக முக்கியமாக சமமாக மதிக்கப்பட வேண்டும். அதுதான் நியாயமானது என உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories: