×

பாஜ பிரமுகருக்கு வெட்டு

பெரம்பூர்: பெரம்பூர் ஜமுனாபாய் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜீவ் (57). பாஜ வடசென்னை தொழிற்பிரிவு செயலாளராக உள்ளார். இவர், நேற்று காலை மாதவரம் நெடுஞ்சாலை பிருந்தா திரையரங்கம் எதிரே உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ராஜீவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார், ராஜீவை மீட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பாஜ பிரமுகர் ராஜீவ் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு உள்ளதாகவும், இவர், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் முன்விரோதம் காரணமாக இந்த கொலைமுயற்சி சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Paja Prabrakar , Cut to the BJP figure
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது