பூமியை படம் பிடிக்க உளவு செயற்கைகோள் ஏவிய வடகொரியா

சியோல்: வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஹைபர் சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் அந்தநாடு  ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக அதன் அண்டை நாடுகளான ஜப்பான்,தென் கொரியா தெரிவித்தன. இந்நிலையில், செயற்கை கோளில்  கேமராவை பொருத்தி பூமியின்  குறிப்பிட்ட பகுதிகளை படம் எடுக்கும் ஒரு மிக முக்கிய சோதனையை மேற்கொண்டதாக வட கொரியாவின் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில் செய ற்கை கோளின் தொழில்நுட்ப விவரங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால்  பூமியின் புகைப்படங்களை எடுக்க  வட கொரியா ராக்கெட் அல்லது ஏவுகணையை ஏவியிருக்கலாம் என்று தெரிகிறது.

Related Stories: