முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சி.எஸ்.ஐ பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிஎஸ்ஐ பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பார்போற்றும் தமிழகத்தின் தலைமகனாக இன்று செவ்வாய் மங்களத் திருநாளன்று தமது பிறந்த நாளைக் காணும் எமது தமிழ்நாட்டின் பொறுப்புமிக்க முதல்வர், சமயம் மற்றும் சமூகநீதியின் பாதுகாவலர், சூரியனாக வலம் வந்து பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒளி வீசி, சோதனைகளைப் படிக்கல்லாக்கி பெரும் சாதனைகளை சரித்திரங்களைப் படைத்து வருபவர்.

தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும் எதுவும் உம்மை அணுகாது. உம்மை வியத்தகு செயல்களைக்  காணப்பண்ணுவேன். நீடிய ஆயுளால் நிறைவளிப்பேன் எனும் திருவிவிலிய திருவாக்கிற்கினங்க கடவுள் உங்களுக்கு ஆசி வழங்க தாங்கள் தமிழ்நாட்டிலும், நமது இந்திய நாடு முழுவதிலும் பேரும் புகழும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்க என்று நெஞ்சார சிஎஸ்ஐ சென்னை பேராயமாக வாழ்த்துகின்றோம். இவ்வாறு சிஎஸ்ஐ சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் வாழ்த்து கூறினார். மேலும் பேராய துணை தலைவர் அசோக்குமார், மேன்யல் எஸ்.டைட்டஸ், பேராய பொருளர் ஏசுதாஸ், பேராயரின் சேப்ளின் ஜி.எர்னஸ்ட் செல்வதுரை ஆகியோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: