×

எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்: டி.ஆர்.பாலு எம்.பி பேச்சு

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., பேசியதாவது: எல்லோரும் ஒற்றுமையாக இருந்து போரிட தவறுகிறோம் என தேஜஸ்வி பேசியுள்ளார். நாட்டில் சுதந்திரம் இல்லை என உமர் அப்துல்லா பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கூறும் கருத்துகளை எல்லாம் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்துவிட்டோம். இன்றைக்கு தென்னகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறீர்கள். 1996, 2004ம் ஆண்டுகள் போல் இந்த நிலை இருக்க வேண்டும். அன்றைக்கு இருந்ததை விட இன்று கூடுதலாக போரிட வேண்டும்.

அனைவரும் ஒன்றுகூட வேண்டும். தற்போது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தழுவிக்கொள்கிறோம். ஆனால், தேர்தல் வந்தால் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போல் தனித்தனியாக நின்றுகொண்டிருக்கிறோம். இதனால், வாக்குகள் பிரிந்துபோய்விடுகிறது. தேசிய அளவில் எதிர்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தினால் தான் நாட்டில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவரும் ஒன்றாக சேர்ந்து மதத்தை தலையாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடும் இயக்கத்தை இதோடு முடித்துவைக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றுசேர வேண்டும். முதல்வரும், நானும் இளம் வயதில் இருந்து ஒன்றாகவே இருக்கிறோம். முதல்வர் இமாலய அளவிற்கு உயர்ந்துள்ளார். அவருக்கு முண்டாசு கட்டுவது என்பது என்னால் முடியாது. முதல்வரை இன்று அனைவரும் வாழ்த்தி வருகிறார்கள். அவருக்கு மேலும் புகழை சேர்ப்பேன்.


Tags : Opposition ,DR ,Palu , Opposition must unite: DR Palu MP speech
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!