தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள்; நாங்கள் சகோதர, சகோதரிகள்: உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பினராயி விஜயன் பேச்சு

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்; தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள்; நாங்கள் சகோதர, சகோதரிகள். இளைஞரணி தலைவராக இருந்து மாநிலத்தலைவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார். படிப்படியாக முதலமைச்சராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது.

ஸ்டாலினின் 23 ஆண்டு கால வாழ்க்கையை புத்தகத்தில் எழுதியுள்ளார். பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க ஸ்டாலின் போராடி வருகிறார். மிசா கால கட்டத்தில் நானும் ஸ்டாலினும் பாதிக்கப்பட்டோம். ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து, இந்த உயரத்தை அடைந்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பதிலும் திராவிட இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரளாவுடனான நல்லுறவு தொடர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து வருகிறார் இவ்வாறு கூறினார்.

Related Stories: