காஷ்மீருக்காக தமிழ்நாடு குரல் கொடுத்தது, தோளோடு தோளாக நின்றதை மறக்க மாட்டோம்: உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் உமர் அப்துல்லா உருக்கம்..!

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா; 13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் மு.க.ஸ்டாலின்; தன் செயலால் மக்கள் மனதில் நிற்பவர். மு.க.ஸ்டாலின் குறித்த மக்களின் மனநிலையை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கின்றன. என்னை போல, ஸ்டாலினும் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றிகளை குவிக்கிறார் ஸ்டாலின். உழைக்கும் மக்கள் மு.க.ஸ்டாலினை புரிந்து கொண்டுள்ளனர். மு.க.ஸ்டாலினின் சுயமரியாதை பல பாகங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும். ஜம்மு -காஷ்மீருக்கும், தமிழகத்திற்கும் பல நெருங்கிய தொடர்பு உள்ளது. காஷ்மீருக்காக தமிழ்நாடு குரல் கொடுத்தது, தோளோடு தோளாக நின்றதை மறக்க மாட்டோம். இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலம் ஒன்று யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது; எங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்கப்படாமலேயே அது நடந்தது.

பல கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன. பல வேற்றுமைகளை கொண்டது தான் இந்தியா. நாட்டின் மத சுதந்திரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. நான் என்ன உடை அணிய வேண்டும், எதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது எனக்கும் என்னுடைய இறைநம்பிக்கைக்கும் இடையிலானது. நாடு தற்போது அபாயகரமான நிலையில் உள்ளது.

Related Stories: