2வது இன்னிங்சில் தெ.ஆ. 354/9 டிக்ளேர்; நியூசிலாந்து அணிக்கு 426 ரன் இலக்கு

கிறிஸ்ட்சர்ச்:தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட்டில்  ஆடுகிறது.முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 276 ரன் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றது. 2வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் கடந்த 25ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல்அவுட்ஆனது.பின்னர் முதல் இன்னிங்சைதொடங்கிய நியூசிலாந்து 293 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக காலின் டி கிராண்ட்கோம்  நாட்அவுட்டாக 120 ரன் எடுத்தார். தென்ஆப்ரிக்க தரப்பில் ரபாடா 5விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 71 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்கா நேற்றைய 3ம்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்திருந்தது. 4வதுநாளான இன்று 100 ஓவரில்  9விக்கெட் இழப்பிற்கு 354ரன்எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கேய்ல் வேரின்னே நாட்அவுட்டாக 136 ரன் எடுத்தார். பின்னர்  426 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் லதாம் 1 ரன்னிலும், வில்யங் ரன் எதுவும் எடுக்காமலும் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தனர். நிக்கோலஸ் 7 ரன்னில் அவுட் ஆனார். 15 ஓவரில் நியூசிலாந்து 3விக்கெட் இழப்பிற்கு 43 ரன் எடுத்திருந்தது.

Related Stories: