×

அருப்புக்கோட்டையில் ஜல்லிகளைப் பரப்பியாச்சு சாலை வேலை என்னாச்சு?

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை - திருச்சுழி ரோட்டில் தேவாங்கர் கலைக்கல்லூரி எதிர்புறம் டி.ஆர்.வி.சாலை உள்ளது. இப்பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் உள்ளது. இங்கு தினந்தோறும் பரிசோதனைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி, கொரோனா தடுப்பூசி மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்கும் பெண்கள் அதிகம் வருகின்றனர். அத்துடன் இப்பகுதியில் விரிவாக்கபகுதிகள் அதிகம் உள்ளது.மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விரிவாக்கப் பகுதி மக்கள் காந்திநகர் வந்து அருப்புக்கோட்டை நகருக்குள் வருவதற் டிஆர்வி சாலையைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இச்சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக இருந்தது.
இதனால் கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியிலிருந்து மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 11 லட்ச ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

ஆனால், கடந்த 15 நாட்களுக்கு மேல் ஜல்லிக்கற்கள் பரப்பி, செம்மண் கொட்டியும் கிடக்கிறது. பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. மேலும் மருத்துவமனை முன்பும் ஜல்லிக்கற்கள் பரப்பியிருப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்கள் டூவீலர் மற்றும் ஆட்டோக்களில் மருத்துவமனைக்கு வந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் டூவீலர்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சாலைப்பணியை விரைந்து முடிக்கவும், மெட்டல் சாலை போடுவதை விட்டு தார்ச்சாலையாக போடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aruppukottai , What is the road work in Aruppukottai to spread gravel?
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்