×

மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: நடால் சாம்பியன்

அகாபல்கோ: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் கேமரான் நோரியுடன் நேற்று மோதிய நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 4வது முறையாக மெக்சிகோ ஓபனில் கோப்பையை முத்தமிட்டார். முன்னதாக அவர் 2005, 2013, 2020ல் இங்கு சாம்பியனாகி இருந்தார்.நோரியுடனான பைனல் 1 மணி, 54 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. காயம் காரணமாக நீண்ட ஓய்வுக்குப் பிறகு 2022 சீசனில் களமிறங்கிய நடால், தொடர்ச்சியாக 3வது தொடரில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடால் தனது டென்னிஸ் வாழ்க்கையில் கைப்பற்றிய 91வது சாம்பியன் பட்டம் இது.


Tags : Mexico Open Tennis ,Nadal , Mexico Open Tennis: Nadal Champion
× RELATED சில்லி பாயின்ட்…