கிரிப்டோகரன்சி, உக்ரைன் பற்றி பதிவு பாஜ தலைவர் நட்டாவின் டிவிட்டர் கணக்கு ஹேக்

புதுடெல்லி: பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவின் டிவிட்டர் கணக்கு விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் சமீப காலமாக முக்கிய அரசுத் துறைகள், தலைவர்களின் டிவிட்டர், பேஸ்புக் கணக்குகள், விஷமிகளால் அடிக்கடி ஹேக் செய்யப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பரில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதில் பிட்காயின் பற்றிய பதிவு வெளியிடப்பட்டது. இந்நிலையில், பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவின் டிவிட்டர் கணக்கை விஷமிகள் நேற்று ஹேக் செய்தனர். அதில், உக்ரைனுக்கு நிதி உதவி அளிப்பதாகவும், ரஷ்யாவுக்கு உதவிகள் செய்யும்படி வேண்டுகோள் விடுப்பதாகவும் பதிவுகள் வெளியிடப்பட்டது. மற்றொரு பதிவில் கிரிப்டோகரன்சியை அவர் நன்கொடையாக ஏற்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால், நட்டாவின் டிவிட்டர் கணக்கு சிறிது நேரம் முடக்கப்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் அது சீராக்கப்பட்டது.

Related Stories: