×

4 ஆயிரம் கோயில்கள் வருவாய் அடிப்படையில் மாற்றி அமைப்பு: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை

சென்னை: தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை உதவி ஆணையர் பிரிவில் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில், அரண்மனைக்காரன் தெரு கச்சாலீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், பெசன்ட் நகர் அஷ்லட்சுமி கோயில், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயில், ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயில், முகப்பேர் சந்தான சீனிவாச பெருமாள் கோயில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், பாடி திருவல்லீஸ்வரர் கோயில், எழும்பூர் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உட்பட 16 கோயில்கள் செயல் அலுவலர் முதல் நிலை ஆகவும், மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோயில், சூளை அங்காளபரமேஸ்வரி கோயில், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயில், ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோயில் உட்பட 14 கோயில் செயல் அலுவலர் இரண்டாம் நிலை ஆகவும், வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தமன் கோயில், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயில், திருவட்டீஸ்வரன் பேட்டையில் திருவேட்டீஸ்வரர் கோயில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில், பெரியமேடு எல்லையம்மன் கோயில் உட்பட 29 கோயில்களில் மூன்றாம் நிலை ஆகவும், 4 கோயில்கள் தரம் உயர்த்தப்படுகிறது. அதே போன்று செங்கல்பட்டு உதவி ஆணையர் பிரிவில் திருப்போரூர் கந்தசாமி கோயில் நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை, திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில் செயல் அலுவலர் முதல் நிலை ஆகவும், மதுராந்தகம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், கோதண்டராமர் கோயில், மாமல்லபுரம் ஸ்தலசயனபெருமாள் கோயில், திரிசூலம் திரிசூலநாதசுவாமி கோயில், தையூர் முருகீஸ்வர் கோயில் ஆகிய 4 கோயில் செயல் அலுவலர் நிலை 3ம் ஆகவும், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் நான்காம் நிலை ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Commissioner ,Kumarakuruparan , 4 thousand temples converted on revenue basis: Commissioner Kumarakuruparan action
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...