உக்ரைனுக்கு பல நாடுகள் ஆயுதங்கள் சப்ளை; நெதர்லாந்தை தொடர்ந்து ஜெர்மனும் அனுப்புகிறது

வாஷிங்டன்: உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ உதவி அளிக்க முன்வரவில்லை. இந்த நிலையில் திருப்பமாக உக்ரைனுக்கு பிற நாடுகளிலிருந்து ஆயுத உதவி கிடைத்துள்ளது. உக்ரைனுக்கு ஆயிரம் டாங்கி எதிர்ப்பு கருவிகளையும், 500 ஏவுகணைகளையும் வழங்கப்படும் என ஜெர்மனி சான்சிலர் ஒலாப் ஷோல்ஸ் கூறியுள்ளார். இதேபோல நெதர்லாந்தும் 50 டாங்கி எதிர்ப்பு கருவிகளை வழங்க முன்வந்துள்ளது. கூடுதலாக உக்ரைனுக்கு 400 ஏவுகணைகளையும் வழங்கப்படும் நெதர்லாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை உக்ரைனைக்கு வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக வான்வெளி தாக்குதலை எதிர்கொள்வதற்கு தேவையான போர் கருவிகளை வழங்க அமெரிக்க முன்வந்துள்ளது. இதேபோல செக் குடியரசும் 9.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் பெத்ரோ ஃபியாலா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உக்ரைனுக்கு இயந்திர துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் அவைகளுக்கு தேவையான குண்டுகள் அனுப்பிவைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் 175 படைகள் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்படும் போர்ச்சுகல் தெரிவித்துள்ளது. இவ்வாறாக உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் ஆயுதங்களை சப்ளை செய்து வருகின்றன.

Related Stories: