×

மும்பை-கொல்கத்தா முதல் போட்டியில் மோதல்; முழு அட்டவணை நாளைக்குள் வெளியாகிறது

மும்பை: 10 அணிகள் பங்கேற்றும் 15வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 26ம்தேதி தொடங்கி மே 29ம்தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை, புனேவில் மட்டும் லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ, பி பிரிவில் சென்னை, ஐதராபாத், பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு அணி அதே குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.

மேலும் எதிர்குழுவில அதற்கு நேராக உள்ள அணிக்கு எதிராக 2 முறையும், மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். மார்ச் 26ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் என தகவல் வெளியாகி உள்ளது. போட்டிக்கான முழு அட்டவணை நாளைக்குள் வெளியிடப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Tags : Mumbai ,Kolkata , Mumbai-Kolkata first match clash; The full schedule will be released by tomorrow
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...