×

சூளகிரி ஒன்றியத்தில் சென்னப்பள்ளி, பங்கனள்ளி மாதிரி ஊராட்சிகளாக தேர்வு

சூளகிரி: சூளகிரி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. அதில் பங்கனள்ளி, சென்னப்பள்ளி ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி  ஊராட்சிகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவின் பேரில் இரு ஊராட்சிகளிலும் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு, தெரு விளக்கு சீரமைப்பு, குப்பைகளை தரம்பிரித்தல், மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசின் 15வது நிதிக்குழு மானியத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிதி மூலம் ஏற்டுத்தப்பட்டு வருகிறது.

இப்பணிகளை சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேமநாத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சசிகலா பாக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுப்பிரமணி, பொறியாளர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணவேணி மாரிமுத்து, சரஸ்வதி செல்வம், ஊராட்சி செயலர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கண்காணித்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மாதிரி கிராம திட்டத்தின் கீழ் சென்னப்பள்ளி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் புதிய முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த முறை கால்வாயில் சாக்கடை கழிவுகளில் தேவையற்ற பொருட்கள் தேங்காத வகையில் முதல்கட்டத்திலேயே பில்டர் செய்யப்படும் வகையில் அமைக்கப்படுகிறது.


Tags : Chennapalli ,Solagiri Union ,Banganalli , Chennappalli and Panganalli were selected as model panchayats in the Choolagiri Union
× RELATED சூளகிரி அருகே பட்டா நிலத்தில் அமைத்த...